Monday, July 03, 2006

பண்பில்லாத நகரம் பாம்பே.

அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது.

சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த இதழ்.

இதற்காக பல நாடுகளில் உள்ள 35 நகரங்கள், சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆபீஸ், ஓட்டல், மருத்துவமனை போன்ற இடங்களில் தன் பின்னால் ஒருவர் வருகிறார் என்றவுடன், கதவை பிடித்துக்கொண்டு வழிவிடுவது, பேப்பர் கட்டு, பைல்கள் விழுந்துவிட்டால், அவற்றை சேகரிக்க உதவுவது, எந்த பொருள் வாங்கினாலும், பில் பணம் செலுத்தியவுடன் நன்றி சொல்வது என்று மூன்று முக்கிய பண்புகளை வைத்து சர்வே செய்யப்பட்டது.

மும்பையில் அப்படிப்பட்ட மூன்று பண்புகளிலும் பல இடங்களிலும் பல தரப்பினரும் மிக குறைவாகவே மதிப்பெண் வாங்கியுள்ளனர். எங்கும் இப்படிப்பட்ட அடிப்படை பண்பு காணப்படவில்லை என்கிறார்கள் இந்த சர்வே எடுத்தவர்கள்.

ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்து ஏழு மாதங்களே ஆன ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் நகரை விட, மிக மோசமாக இல்லை என்பது தான் மும்பைக்கு கிடைத்த ஆறுதல்.

மும்பையை போலவே, லண்டன், பாரீஸ் மக்களுக்கும் பண் பில்லை என்பதையும் சர்வே எடுத்தவர்கள் கண்டுபிடித்து விமர்சித் துள்ளனர். பதினெட்டு ஐரோப்பிய நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இரண்டு நகரங்களுமே பத்தாவது இடத்தை பகிர்ந்து கொண் டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மிகுந்த பெருமிதத்தை அடைந்துள்ள நகரம். ஆம், அங்கு பண்பு, கருணை என்பது 80 சதவீதம் மக்களிடம் நிறைந்துள்ளது என்று சர்வே கூறுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், மக்களிடம் அக்கறை, பரிவு, கருணை எல்லாம் அதிகரித்து விட்டது என்கின்றனர் சர்வே நிபுணர்கள்.

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச், கனடாவின் டொரன்டோ, பிரேசிலின் சுவா பாலோ, ஜெர்மனியின் பெர்லின் ஆகிய நகரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks:Dinamalar..

Sunday, March 05, 2006

நாய்படும் பாடும், நாய்படா பாடும்



நம்மை பற்றி பேச நாலு சனம் இருக்கு, நாய பற்றி பேச யார் இருக்கிறார்கள். அதனால் நாயப்பற்றி நான் பேசுகிறேன். பின்னர் யாரும் வந்து நாயின் பெயரில் பேசக்கூடாது, யாரடா உணக்கு அதிகாரம் தந்தது எம்மை பற்றி பேச என்று, அதனால் முதலிலேயே இங்குகூறிவிட்டால் தப்பித்துக்கொள்ள ஏதுவாக அமையும் அல்லவா? இது ஒருவகை பாதுகாப்புதான்.குளக்காட்டான் போட்ட ஒழுங்கை படத்துக்கு, பூராயம் ஒழுங்கை பற்றி எழுத, அது பற்றி தொடர்ந்து உறவுகள், துரத்தும் நாய்களைப்பற்றி பேச, எழுந்ததே இக்கட்டுரை.நாய்களில் பலவிதம் உண்டு, பணக்கார நாய்கள் அதை விட்டு விடுவோம். நான் பேசஎடுத்தது சாதாரன நாய்கள். இவையின் பாடு பெரும் பாடுதான்.ஒரு அலுவல் கனநாட்களாக முடிக்க முடியாது இழுத்துக்கொண்டு சென்றால் சொல்வார்கள், "நாய் படாத பாடு படுறன் அலுவல்தான் முடியுது இல்லை" என்று. நாயுக்கு உன்மையிலேயே அலுவல் இருக்குதா? அதை முடிக்க அது பாடு படுதா? அது சும்மா ஒரு இடத்தில் இருக்காது எந்தநேரமும் ஓட்டமும் நடையும்தான். அதையும் சொல்வார்கள், "நாயுக்கு நிக்க நேரமும் இல்லை செய்ய வேலையும் இல்லை" என்று.உண்மயில் இங்கத்திய நாய்களை விட எங்கள் ஊர்நாய்கள் பாவம்தான். நாய்கள் அங்க வாழுறது என்பதே பெரும்பாடுதான். ஓரளவு வசதியான ஆக்கள் வளர்க்கும் நாய்கள் பாடு பறவாய் இல்லை. வசதி குறைந்த ஆட்களும், வசதி இல்லாவிட்டாலும் நாய் வளர்க்கும் ஆசையில் வளப்பவர்கள் நாய்களும், தெரு நாய்களும் படும் பாடு பெரும்பாடு.அவைக்கு முதல் பிரச்சனை உணவு, உணவு காணாமையால் அல்லது இல்லாமையால் அவை முதல் செய்யிற வேலை களவு. களவு என்றால் பெரிய கள்ளக்கடத்தல் அல்ல, உணவின் உரிமையாளருக்கு தெரியாமல் உணவை எடுத்து வருதல், அல்லது அங்கேயே வைத்து உண்ணுதல். இதை சமுதாயம் களவு என்கிறது. அது அதுகளுக்கு தெரியுமா? அது தெரியாமல் அடி வாங்குகின்றன. அடிவாங்கியபின்னர் தப்பித்து ஓடுகின்றன. சிலதுக்கு அடிவிழும் சிலதுக்கு அடிவிழாது, அடி விழுந்தாலும் நொண்டி நொண்டி ஓடித்தப்பும்.நானும் ஒரு நாய் வளர்த்தேன். நான் சாப்பிடுகிறேனோ இல்லையோ நாய்க்கு மட்டும் சாப்பாடு வைத்து விடுவேன். ஆனால் ஒவ்வரு நாளும் காலையில் கரிபூசியமுகத்தோட கானப்பட்டார். இரவில் நாய்களை அவிழ்த்து விடுவது வழமை. இரவுதானே அவையளின் காவல்கடமை. கரிபூசிய மூஞ்சையை பார்த்த உடனேயே எனக்கு விழங்கிட்டுது, அண்ணாத்தை இரவில் எங்கயோ போய் அலுவல் குடுத்திட்டு வாறார் என்று. எப்படி கண்டு பிடிக்கிறது, ஒரு நாள் அவராவே மாட்டுப்பட்டார் வரும்போது ஒரு அப்ப சட்டியோட வந்தார். நீங்கள் நினைக்கக்கூடாது நான் பழக்கின விளையாட்டு என்று. எங்கள் ஊரிலேயே ஒரேஒரு அப்பக்காற ஆச்சிதான் இருக்கிறா, சில நாட்களின் பின் அவர் வீட்டுபக்கம் வாறதே இல்லை. அப்பக்காற ஆச்சி வீட்டுக்கு போனால் அங்க இருப்பார். கூப்பிட்டாலும் வர மாட்டார் கட்டி இழுத்துக்கொண்டு வருவம், திரும்பவும் போயிடுவார். அங்க ரெண்டு பெடியள் இருக்கிறாங்கள் அவங்கள்தான் எங்கட நாயுக்கு அப்பத்தை குடுத்து மயக்கி போட்டாங்கள் என்று, நானும் தம்பியும் அவங்களோட சண்டையும் போட்டு இருக்கிறம். அவங்களோட சண்டை போட்டாலும் எங்கட நாய் கேட்டால்தானே, சொன்னாலும் நாயுக்கு விளங்கவாபோகுது. பாத்தம் நாயுக்கு அப்பம்தான் விருப்பம் என்றால் அதோட ஆசையை ஏன் கெடுப்பான். அவங்களிடமே நாயை குடுத்துவிட்டோம், நாங்கள் எங்க குடுத்தம் அதுவே ஓடிப்போயிட்டுது.வளர்த்த நாய் ஓடிப்போனாலும் நாய் வளர்க்கும் ஆசை மட்டும் எங்களை விட்டு போகவில்லை. ஊரில நாய்க்கா பஞ்சம், திரும்பவும் ஒரு நாய் அதன் முடிவு சோகமானது. லிபரேஷன் ஒப்பிறேஷன் நேரம். பொம்மறும், நேவியும் அடித்த அடியில் ஓடிவிட்டோம் கட்டி இருந்த நாயை கவனியாது. ஏழு நாட்களின் பின் வந்து பார்த்தபோது, சங்கிலியில் முறுகி செத்துக்கிடந்தது. அந்த சோகம் இன்னும் உண்டு.அதோடசரி நாய் வளர்க்கும் ஆசை, அதன் பின் புலம்பெயர்ந்து விட்டோம். அதுகள் எங்களுடன் வாழ்ந்தகாலத்தில் அவையளின் விளையாட்டு சொல்லி மாளாது. ஒழுங்கயால் ஒரு சனமும் போய்வர ஏலாது. பிச்சைக்காரர் வந்தால் அவை துலஞ்சினம், துண்டகாணல்ல துனியகானல்ல நிலைதான்.ஜரோப்பாவுக்கு வந்தவுடன் அவைக்கு இருக்கிற மரியாதயை பாத்து பெரிய ஆச்சரியம்தான்.அவையை கிழவிமார் தூக்கிக்கொண்டும் போவினம். குளிர்காலத்தில் அவைக்கு குளிருடுப்பும் போட்டு விடுவினம். படுப்பதுக்கு வீட்டிக்குள் குட்டி மெத்தை சாப்பிட சாப்பிட குறையாத சாப்பாட்டு தட்டு, நேற்று வேலைக்கு போகும் போது பார்த்தேன், குழந்தைகளை வைத்து தள்ளும் வண்டிலில் வைத்து ஒரு நாயை, கிழவி ஒண்று தள்ளிக்கொண்டு போகுது. அது குஜாலா இருந்து கொண்டு போற வாற ஆக்களை பாத்துக்கொண்டு போகுது. ராஜ வாழ்க்கைதான் போங்கள்.எங்கள் நாய்கள் பாவம் இங்கத்திய நாய்கள் கொடுத்து வைத்தவை என்று சொல்வோம் என்று பார்த்தால், இங்கத்திய சில நாய்களும், நாய் படாப்பாடு படுகினம். இங்கையும் அவை போய் சேரும் இடத்தை பொறுத்தது. "பெனா" என அழைக்கப்படும் பிச்சைகாரர்களிடம், இவர்கள் உண்மையில் பிச்சைகாரர் இல்லை, ஏனெனில் இருக்க வீடும், உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்கும் இவர்கள் எப்படி? பிச்சைக்காரர்கள் ஆவர், இவர்களுடன் ஒப்பிடும்போது எங்கள் ஊர் பிச்சைகாரர்கள் பாவம். இதுவேறு ஒரு தலைப்பு அதை பிறகு பார்ப்போம். இவர்கள் வளர்க்கும் நாய்கள் பாவம்தான். இத்தனைக்கும் இவ் அரசு நாய்க்கும் சாப்பாட்டுக்கு காசு கொடுக்கிறது. இவர்கள் நாயை வளர்ப்பதே இதற்க்காகத்தான். அதோடகாசுக்கும் வாங்கி குடித்து விடுவார்கள். போனால் போகுது என்று ஒரு சொற்ப உணவை போடுவார்கள். பசிவெறியில் திருப்பி தம்மை கடித்து விடக்கூடாது என்பதற்க்காக. தெளிவாக இருந்தால் ஞாயம் கேட்கும் என்றோ என்னவோ அவைக்கும் கொஞ்சம் பியர் ஊத்தி விடுவினம், தண்ணி இல்லாட்டி அதுகளும் என்ன செய்யும் குடித்து விட்டு போதையில் படுத்து விடும். அதுகளும் பெரும்பாடுதான் படுகிறது.இவ்வளவு மிருகங்கள் உலகத்தில் இருக்க, இந்தநாய்கள் வந்து எப்படி மனிதர்களுடன் இனைந்து கொண்டன? ஆதிகாலத்தில் நாயும் காட்டு விலங்குதான், ஏன் மனிதன் கூடத்தானே. நாயால் சிங்கம், புலி போல் வேட்டையாட முடியவில்லை, சிங்கம் புலிகூட கூட்டுவைக்க முடியுமா? கடிச்சு போடுங்கள். பாத்திச்சு நாய் மனிதனுக்கு கிட்டபோய் நின்றிச்சுது. சும்மா நின்றால் தப்பா நினைப்பான் என்று, வாலை வேறை ஆட்டிச்சுது. அவனும், தான் சாப்பிட்ட மிச்சமீதியையும், எலும்புகளையும் போட்டான். சும்மா இருந்த நாய்க்கு இது போதாதா? அப்படியே சேந்திச்சு, அடிச்சு துரத்தினாலும் அதுக்கு வேற ஏது போக்கிடம் திரும்பவும் வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிக்கும். மனிதனும் பார்த்தான் ஆஹா நன்றி உள்ள பிராணி நாய் என்றான். தான் போட்ட உணவை மறக்காது நன்றியோடு திரும்பவும் வந்திட்டுது என்று நினைத்தான். நாயோ அடுத்த வேளை சாப்பட்டுக்காக திரும்பவும் கூட்டு சேர்ந்து கொண்டது. இப்பொது அது வீட்டு நாய்.இங்கு அதற்கு ராஜபோக வாழ்க்கை, பிழைக்கத்தெரிந்தநாய்.